கிம் ஜாங் உன் ஆபத்தான தலைவர் – அமெரிக்க கடற்படை தளபதி கருத்து

kimjumhuhவடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் பேரழிவுக்கான செய்முறையாகவே பார்க்கப்படுவதாக அமெரிக்க கடற்படை தளபதி கூறியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீனமாக உள்ளது என்றும் இது புதுவிதமான ஏவுகணை சோதனை என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க கடற்படை தளபதி ஹாரி ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர், வடகொரியா நடத்தும் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீனமாக உள்ளது.

மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆபத்தான தலைவர். அவரது பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரழிவுக்கான செயலாகவே பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply