குரு பகவான் வழிபாடு

guruvesaranam

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர். பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான் சுபக்கிரகமாக விளங்குகின்றார்.வாழ்க்கையில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை கிடைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.ஆன்மீக ஞானத்தை வழங்குவதனால் ஞானகுருவான வியாழ பகவானுக்கு ‘பிரகஸ்பதி’ என்ற பெயர் ஏற்பட்டது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த சாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கிரக தோஷம் குருபகவானின் பார்வை கிடைக்கப் பெறுவதனால் விலகுகிறது. வியாழ சுகம் குறைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் கலந்த நீரினால் வியாழ பகவானுக்கு அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற பட்டுச் சாத்தி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் கலந்த எலுமிச்சம்பழ ரசத்தால் அன்னம் படைத்து கடலை நிவேதனம் செய்து நெய்யினால் தீபம் ஏற்றி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும். எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

குருப் பெயர்ச்சி காலத்தில் வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தெட்சணாமூர்த்தியையும் விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படுகின்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply