குளவி கூட்டை அகற்ற வைத்த தீயினால் எரிந்த வீடு

ஒன்ராறியோ- தன்ட பே என்ற இடத்தில் குடியிருப்பாளர் ஒருவர் குளவிக் கூட்டை அகற்ற தவறான-ஆலோசன முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.செய்த காரியம் என்ன வென்றால் தனது வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

வீட்டிற்கு அருகாமையில் தரையில் இருந்த கூட்டை அழிக்க அதன் மேல் பெற்றோலை ஊற்றியுள்ளார் என தீயணைப்பு அதிகாரி ஜோன் ஹே தெரிவித்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. தீ வேகமாக பரவி கூட்டிலிருந்து வீட்டையும் சூழ்ந்து சேதப்படுத்தி விட்டது.

தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துவிட்ட போதிலும் வீட்டின் உட்புற சுவர்களையும் தாக்கிவிட்டது.

தீயினால் காயங்கள் எதுவும் எவரக்கும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதா அல்லது இல்லையா என்பது குறித்து புலன் விசாரனை நடைபெறுகின்றது. இச்செயல் முட்டாள் தனமானதும் ஆபத்தானதுமென தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

பெற்றோல் மிகவும் ஆபத்தானது அதிலும் வெப்பநிலை அதிகரித்த வேளையில் மிக அபாயமானதெனவும் கூறினார்.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply