கூட்டு எதிர்க் கட்சியின் மேதினக் கூட்டம் வரலாற்றில் இடம்பிடிக்கும்: மஹிந்த

Mahinda-R

கூட்டு எதிர்க்கட்சி காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மேதினக் கூட்டத்தில், பாரியளவிலான மக்கள் சக்தியொன்றைத் திரட்டுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டுவதற்காக காலி முகத்திடல் கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்தமை ஒரு சந்தோஷமான விடயம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி முகத்திடல் மேதினம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு கூட்டமாக இருக்கும் என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாகவும் அக்கூட்டம் அமையவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply