சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்

உலகம் முழுவதும் சுமார் 1350 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள பாகுபலி பற்றிய பேச்சு இன்னமும் அடங்கவில்லை.

இரண்டு வருடங்களாக “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?” என பேசிக்கொண்டிருந்தவர்கள், தற்போது இரண்டாவது பாகம் வெளியான பிறகு அதன் பிரம்மாண்டம் பற்றி தான் பேசுகிறார்கள்.

இந்நிலையில், கட்டப்பாவாக நடித்த சத்யராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருவது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் இயக்குனர் ராஜமெளலி முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் மோகன்லாலைதான் அனுகினார் என தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மற்ற படங்கள் கமிட்டாகியிருந்ததால் மோகன்லால் இந்த படத்தை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply