சனீஸ்வர வழிபாடு

சனியைப்போல கொடுப்பானும் இல்லை சனியைப்போல கெடுப்பானும் இல்லை என்று நம் முன்னர்வர்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளோம்.
நவகிரகங்களுள் முக்கியமானவராக சனீஸ்வரன் கருதப்படுகின்றார். சில கோயில்களில் சனிபகவானுக்கு தனி சந்நிதிகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திருநள்ளாரில் தனியான ஆலயம் உண்டு.

திருநள்ளாறில் கோவில் கொண்ட சனீஸ்வரன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னால் வந்த தோஷத்தால் ஏற்பட்ட துன்பத்தை போக்கும் நீதி தேவனாக திருநள்ளாறு சனீஸ்வரன் விளங்குகின்றார்.

சனீஸ்வரன் சாயா தேவிக்கும் சூரிய பகவானுக்கும் மகனாக பிறந்தவர்.கரியநிறத்தை உடையவர் அதனால்தான் கருப்பு வஸ்திரம், நவதானியங்களில் எள்ளு, நீலநிற மலர்கள், வாகனமாக காகம் உடையப் பெற்றவராக காணப்படுகின்றார். சனி பகவானின் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லல் நல்லதல்ல என்று கூறப்பட்டாலும் திருநள்ளாறு சனீஸ்வரனின் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என சித்தர்களும் முனிவர்களும் கூறுகின்றனர்.

ஒருவருடைய வாழ்வில் 3 தடவைகள் ஏழரைச்சனிதோஷம் பீடிப்பதாக கூறுவர். முதலில்வருவது மங்குசனி என்றும் நடுவில் வருவது பொங்குசனி என்றும் கடைசியில் வருவது மரணச்சனி என்றும் சொல்லிக்கொள்வார்கள். இந்தகால கட்டங்களில் சனீஸ்வர வழிபாடு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமைகளில் சிவன் கோவில் அல்லது விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் நவக்கிர சந்நிதானத்தில் சனீஸ்வரனை வழிபடுதலே சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் விநாயகப்பெருமானையோ அல்லது ஆஞ்சநேயரையோ வழிபட்டாலும் தோஷம் குறையும் என்று சொல்வதுண்டு.

ராம காரியத்தில் ஈடுபட்ட அனுமனின் வாலினை ஒருமுறை சனீஸ்வரன் பிடித்துக்கொள்ள அனுமனும் அங்கும் இங்குமாக குதித்து குதித்து ராம பணியில் ஈடுபட  வாலினை இறுகப்பிடித்துக்கொண்ட சனிக்கு உடல் முழுதும் வலி ஏற்பட்டது. அதனால் தன்னை விட்டுவிடும்படி அனுமனிடம் சனி வேண்டிக்கொண்டார். அதற்கு அனுமனும் சரி விட்டு விடுகிறேன் ஆனால் என்னை வழிபடும் பக்தர்களை நீ பிடித்துக்கொள்ளக்கூடாது என்று கூறவும் சனிபகவானும் அப்படியே ஆகட்டும் என ஒப்புக்கொண்டார். அன்று முதல் அனுமனை வழிபடுகின்றவர்களை சனி தனது பார்வையை விலக்குகின்றார் என்று கூறப்படுகிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply