”சாஸ்திரிகத்திலிருந்து வழுவுகிறது பரதநாட்டியம்” அருட்செல்வி

நவீன காலத்தில் பரதநாட்டியம் சாஸ்திரிகத்திலிருந்து திரிவடைந்து எல்லாப் பாணிகளையும் உள்வாங்கி வழுவிச் செல்வதுடன் அடிப்டை விதிகளும் மாறுகின்றது. இதனால் பரதத்தின் அடிப்படைச் சாஸ்திரிகம் எதிர்காலச் சந்ததியினருக்குப் பிழையாகப் பதியப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் பரதநாட்டிய அலங்காரத்திலும் பெறும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என யாழ்.பல்ககைக்கழக நுண்கலைப்பிரிவின் நடனத்துறைத் தலைவர் அருட்செல்வி கிருபைராஜா தெரிவித்தார்.

caltural-chang-in-dance

arulselvi

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போழுது புதிய ஆடல் வடிவங்களை இணையத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. இது எம் மாணாக்கர்களின் புதிய ஆக்கத்திறனைத் தூண்டுவதோடு புதுவகையான ஆடை அலங்காரங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மாணாக்கர்கள் இப்போது ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் தானாகவும் இயங்க முடியும். அத்துடன் அவர்களுக்கு மனஉறுதியையும் தற்துணிவையும் கொடுக்கிறது.

இனணயத்தில் பரதத்தினைப் பார்ப்பதினால் மாணாக்கர்கள் அதனை அப்படியே பிரதி செய்வதோடு தமது கற்பனையின் புதிய ஆக்கத்திற்கு இடம் கொடுப்பதில்லை போன்ற தீமைகளும் உள்ளன என்றார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply