சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்

பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 11 வயதான குறித்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் அரச வங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

அந்த தருணத்தில் அருகில் இருந்த கடையில் நின்றிருந்த சிறுமியின் மீது துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது.

அதில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply