சித்தமருத்துவ அழகுக் குறிப்புகள்

4-720x480

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை சேர்த்து குழைத்து உடம்பில் தடவி, பயத்தம் மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.

ஒரேஞ்ச் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சவர்க்காரம் உபயோகித்து கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைப்பதற்கு தினமும் காலையில் ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

நகங்களை வெட்டும் முன்பாக எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட முடியும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply