சிரிக்கும் புத்தரை எந்த திசையில் வைத்தால் என்ன அதிர்ஷ்டம் கிட்டும்?

IndiaTvac2b79_laughing_buddha

கிழக்கு திசை: வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.

பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

தென் கிழக்கு திசை: சிரிக்கும் புத்தரை அறை, கூடம், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.

சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேசை: சிரிக்கும் புத்தரை அலுவலக மேசையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேசையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேசையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.

கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேசையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply