சிறு தொழில் முயற்சியாளர்களின் பங்கு அதிகாரிக்கப்பட வேண்டும்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் நெறிப்படுத்தலில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண முயற்சியாளரின் வர்த்தக கண்காட்சியினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ் சங்கிலியன் தோப்பில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.சுரேத ஐயரட்ண ஆகியோர்கள் கலந்துகொண்ட குறித்த கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். நாட்டின் பொருளாதார ரீதியான தன்மையினை கட்டியேழுப்ப வேண்டிய தேவைக்கான தருணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனுடாக ஒரு பொருளாதார வளர்ச்சியினை மேம்;படுத்த அவசியம் உள்ளது.

எனவே சிறு தொழில் முயற்சியாளர்களின் பங்கு வட மாகாணத்தில் அதிகாரிக்கப்பட வேண்டும்.

அது தான் எமது எதிர்பார்பாக இருக்கின்றது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்காக புதிய வழிவகையிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply