சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் 17பேர் மாயமாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு காலை 6 மணியளவில் ஏற்பட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும்சீன ஊடகமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply