சென்று வா கோப்பாய் செந்தூரா! உன் கனவு நனவாகட்டும்!!!!

ரயில் வருகிறது என்றால்,

உனக்கு மரண பயம் வரும் என்று

உன் அக்கா என்னிடம் கூறினாரே!

ரயிலுக்கு பயந்த நீ எவ்வாறு துணிவு கொண்டாய்
தண்டவாளத்தில் தலை வைத்து சாவதற்கு

அதற்குள் நீ தண்டவாளத்தில் தலை வைத்து சாக முற்பட்தை அவதானித்த ரயில்வே ஊழியர் பிடித்து இழுத்து வந்த போது
உன் மனம் மாறியிருக்க வேண்டும்

ஆனால் மீண்டும் நீ எங்கோ ஒளித்திருந்து ரயில் கிட்ட வரும் போது இரண்டாவது தடவை ஓடிச்சென்று ரயிலில் மோதி உயிர் விட எவ்வாறு மனது வந்தது உனக்கு!!!!!

அப்படியானால் நீ சாக முடிவெடுக்க
அசாத்திய துணிவு உனக்கு எங்கிருந்து கிடைத்தது மகனே!!!
உன் அப்பாவுடன் உரையாடிய போது அறிந்து கொண்டேன்!!!

பண்பான பணிவுள்ள உன் அம்மா உன் மீதும் உன் கல்வி மீதும் வைத்த நம்பிக்கையை
நீ ஏன் வெறுத்தாய் மகனே!!!!
உன் அம்மாவைப் பார்த்த போது நொருங்கிப் போனேன்

தொலைபேசி ப் பாவனை இல்லை, நட்பு வட்டம் இல்லை உனக்கு,
படிக்க வேண்டும் என்ற ஆசை,
நடக்கும் சம்பவங்களை வீட்டில் கலந்துரையாடும் நீ,
அரசியல் தொடர்பு, பின்னனி, யுத்தப்பாதிப்பு, அது பற்றிய எந்தவித கரிசனையும் இல்லாத நீ,

வெள்ளைச் சீருடையுடன் பள்ளி செல்லும் வழியில் கொப்பி வாங்கி,
அதில் அவசர அவசரமாக
ஆனால் கருத்தை நிதானமாக எழுதி
ஆங்கிலத்தில் புலமையில்லாத நீ
கொப்பியில் ஆங்கிலப் புலமையைக் காட்டி
நாட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி
செத்துவிட எப்படி வந்தது துணிவு உனக்கு

பல்கலைக்கழகத்திற்கு செல்லத் தயாராக இருக்கும் உன் அக்காவுடன் கதைத்த போது அறிந்து கொண்டேன்!!!!!

கடைசியாக எனக்கிருந்த ஒரேயொரு சந்தேகத்தையும் கேட்டேன்
அதாவது அவன் எழுதி வைத்த கடிதம் தொடர்பானது

அந்தக் கடிதம் அவனுடையது என்றும் அது அவனுடைய கையெழுத்து தான் என்பதையும் மிகவும் திடமாக ஒத்துக் கொள்கின்றனர் பெற்றோர். அதிலும் அவன் அக்கா இதில் உறுதியாக இருக்கிறார்!!!!

ஆக மொத்தத்தில் உனது இயல்பான வாழ்வுக்கும்
நீ செய்து கொண்ட காரியத்திற்கும் என்னால் எந்தவொரு ஒற்றுமைகளையும் காண முடியவில்லை.

இயற்கையில் வீரத் தன்மையில்லாத நீ
எவ்வாறு வீறு கொண்டாய் என்பதை நம்ப முடியவில்லை

உன் குடும்ப உறவுகளுடன் கதைத்த போது தெரிந்து கொண்டேன்.

மகனே,
உன் சாவு உண்மையானது
உன் உணர்வு புனிதமானது
உன் உணர்வுகளை ஈழத் தமிழன்
என்ற வகையில் கொச்சைப்படுத்த
நான் தயாரில்லை

ஆனால்
உன் எண்ணத்தை ஈடேற்ற
நீ அடைந்த வழி மிகத் தவறானது.
அதை யாரும் நியாயப்படுத்த முடியாது

அதை வைத்து அரசியல் செய்வது
அபத்தம்

அதை என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை!!!!

ஆனால் உன் சாவு, பலரின் மனச்சாட்சிகளைத் தட்டி உலுக்கட்டும்.

சென்று வா மகனே
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

உன் குடும்பத்தாரை சாந்தப்படுத்த முடியவில்லை
அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மாணவன் தொடர்பான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் நேரில் அவரின் குடும்பத்தாருடன் அறிந்து, அவதானித்த விடயங்கள்.

12316608_893957553987359_7865957240817904763_n

Rajeevan Jeyachandramoorthy

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply