ஜனாதிபதிக்காக பாரம்பரிய இசைநிகழ்ச்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களாதேஸ் விஜயத்தை முன்னிட்டு விசேட பாரம்பரிய இசைநிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் ஜனாதிபதி மாளிகையில் குறித்த பாரம்பரிய இசை நிகழ்ச்சி இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பங்களாதேஸ் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் மற்றும் பிரதமர் ஷீக் ஹசீனா ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

குறித்த இசைநிகழ்ச்சியை அடுத்து பங்களாதேஸ் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட விசேட ராத்திரி விருந்துபசார நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply