ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யா வழக்கறிஞருடன் சந்திப்பு: ஆதராத்தை வெளியிட்ட டிரம்ப் மகன்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவைச் சேர்ந்த வழக்கறிஞரை சந்தித்தது தொடர்பான இ-மெயில் விவரங்களை டொனால்ட் டிரம்ப் மகனான ஜான் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், கிளிண்டனுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள வழக்கறிஞரை சந்தித்ததாகவும் அதனை ஜான் டிரம்ப் ஒப்புக் கொண்டதாகவும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அந்த சந்திப்பு தொடர்பான இ-மெயில் தகவல்களை ஜான் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சந்திப்பின் போது எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ள ஜான் டிரம்ப், ரஷ்ய பெண் வழக்கறிஞர் உடனான சந்திப்பு குறித்து, தன்னுடைய தந்தையிடம் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜான் டிரம்ப்பின் இந்த செயலுக்கு அவரது தந்தை டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்ததோடு வெளிப்படையான அணுகுமுறை என்றும் தெரிவித்துள்ளார் .

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply