ஜுலை இனக்கலவரம் குறித்த சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கருத்து கேலிக்கூத்து: புத்திக பத்திரண

Buddi

1983ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடர்பான சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கருத்து கேலிக்கூத்தாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பதில் சமர்ப்பித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர், பதுளை, மாத்தறை, கண்டி, கேகாலை மாவட்டங்களில் வெறும் ஏழு தமிழர்களே உயிரிழந்ததாக குறிப்பிட்டார். அவரின் கூற்று பெரும் கேலிக்கூத்தாகும்.

நாடாளுமன்றத்தில் இவ்வாறான தவறான கூற்றுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், மலையக மக்களின் பாதிப்புகள் குறித்து வெளிப்படுத்துவதற்கென ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

இவ்வாறான ஆணைக்குழுவை நியமிப்பதன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு தவறான தரவுகளை வெளிப்படுத்துவது தவிர்க்கப்படும்” என்றார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply