தனது சேவையில் கவர்ச்சிகரமான அம்சத்தினை உள்ளடக்கும் ட்ரொப் பாக்ஸ்

625.0.560.350.160.300.053.800.668.160.90கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைனில் கோப்புக்களை சேமித்து வைக்கும் சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Dropbox ஆனது தனது பயனர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வசதி ஒன்றினை அறிமுகம் செய்திருக்கின்றது.

அதாவது தனது சேவையின் ஊடாக ஒன்லைனில் சேமிக்கப்பட்ட கோப்புக்களை பேஸ்புக் மெசஞ்சரின் ஊடாக நண்பர்களுடன் பகிரக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசஞ்சரில் உள்ள More பொத்தானை கிளிக் செய்து தென்பெடும் Dropbox இனை கிளிக் செய்து Dropbox கணக்கினுள் உள்நுழைந்து (Login) பகிரப்படவேண்டிய கோப்பினை தெரிவு செய்தல் வேண்டும்.

இவ் வசதி தற்போது iOS மற்றும் Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply