தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜராக இருந்த பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது.

இதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்தாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

சோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது, சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்று கூறினார் .

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply