தபால் தொழிற்சங்கம் போராட்டத்திற்கு தயாராகிறது

தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விஷேட அமைச்சரவை குழு வழங்கிய யோசனைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று கூட்டு தபால் தொழில்சங்க முன்னணி கூறியுள்ளது.

அதன்படி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் சில தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கூட்டு தபால் தொழில்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார அத தெரணவிடம் பேசும் போதே இந்த விடயத்தை கூறினார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply