தர்பூசணி விதையின் பயன்கள்

watermelon-620x330

கோடைக்காலத்தில் விலைக்குறைவாக அதிகளவில் கிடைக்கும் தர்பூசணி விதையிலும் ஏராளமான நன்மைகள் உண்டு.

ஒரு கையளவு தர்பூசணி விதையை ஒரு லீட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டிப் பருக வேண்டும். இந்த பானத்தை 3 நாட்கள் தொடர்ந்து குடித்து ஒரு நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் குடிக்கும்போது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதோடு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.

தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை தொடர்ச்சியாக குடிக்கும்போது இதயம் ஆரோக்கியமாக இயங்கும். அத்துடன் தலைமுடி பாதிக்கப்படுவது தலைமுடி உதிர்வது தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.

தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். ஆகவே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க விரும்பினால், தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடியுங்கள்.

தர்பூசணி விதைகள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துவதற்கும் தர்பூசணி விதைகள் பயன்படும். அத்துடன்  நரம்பு மண்டல இயக்கத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply