தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை கூறும் மஹிந்த

685441679Amaraweeraதற்போதிருக்கும் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஜனநாயக வழிமுறையைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

தேர்தல் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கடமையாற்றினால் தற்போது இருக்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முடியும் என்றும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர் இவ்வாறு கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply