தலைமுடி உதிராமல் இருக்க என்ன செய்யலாம்?

1383581_10202226107919838_1164459712_n

பல பெண்களின் பிரச்சினைகளில் ஒன்றாக தலைமுடி உதிர்வு காணப்படுகின்றது. இதற்கு காரணங்கள் பல வகையுள்ளது. எனவே தலை முடி உதிர்விற்கான காரணங்ளை எடுத்து நோக்கலாம்.

கால ஓட்டத்தின் போக்கில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வேலைப்பழு தலை முடி உதிர்வுக்கான காரணங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

கடைகளில் விற்பனையாகும் இரசாயண சம்போக்கள் தலை முடி உதிர்வில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.

தலை முடிக்கு வெப்பம் கொடுப்பது முடி உதிர்வில் அதிக தாக்கம் செலுத்தும். சாதாரண வெப்ப காலத்திலேயே தலை முடி உதிர்வதை அவதானிக்க முடியும். அப்படிஇருக்கையில் அயன் போடுவதாக வெப்பத்தை முடிக்கு கொடுக்கும் பொழுது மண்டை ஒட்டில் படும் வெப்பம் காரணமாக முடி உதிர்கின்றது.

வாரம் இரு முறையாவது தலை குழிக்க வேண்டும்

வெப்ப காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

எமது உடல் சூட்டுத்தன்மை உடையதாக அறியும் பட்சத்தில் திகமும் அதிகளவு பழங்களையும் நீத்துபூசனி மற்றும் வெள்ளரிக்காய் பொன்ற குளிர்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இரவு வேளைகளில் தலைமுடியினை அவிழ்த்துவிடாமல் மடித்து மண்டை ஓட்டிற்கு நோகாதபடி கட்டுவதன் மூலம் தலை முடி உதிராது. இவ்வாறு கட்டும் பொழுது மண்டை ஓட்டில் இரத்த ஓட்டம் பாதிக்காத படியும் மண்டை ஓடு நோகாதபடியும் கட்டிக்கொள்ள வேண்டும்.

பேன், பொடுகு தொல்லைகள் இருப்பின் விரைவில் அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும். பேன் பொடுகு அதிகமாகும் பொழுது தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.
எனவே வாழ்க்கையில் எமது தலைமுடிக்கு விபரீதம் விளைவிக்கும் விடயங்களை தவிப்பதன் மூலம் தலைமுடி உதிராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply