தாமாகவே ஒளியைப் பிறப்பிக்கும் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

சமுத்திரங்களின் மிகவும் ஆழமான பகுதிகளில் சூரிய ஒளி கிடைப்பது மிக மிக அரிதாகவே இருக்கும்.

இதனால் அப் பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகவே இருக்கும்.

ஆனால் சில வகையான பவளப்பாறைகள் சூரிய ஒளிக்கு பதிலாக தாமே ஒளியைப் பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை ஆழமான பகுதிகளில் அல்காக்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட உதவியாகவும் இருக்கின்றன.

சவுத்தாம்ரன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன.

சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீற்றர்கள் ஆழத்திற்கே ஊடுருவும்.

எனவே இதனை விடவும் ஆழமான பகுதிகளில் காணப்படும் பவழப்பாறைகள் சுய ஒளியைப் பிறப்பித்து உயிர்வாழ்கின்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply