தாய்லாந்து மன்னரை அவமதித்து வீடியோ-பேஸ்புக் நிறுவனத்திற்கு அரசாங்கம் மின்னஞ்சல்

tailand001தாய்லாந்து மன்னர் மேலாடை இன்றி ஷொப்பிங் செல்லும் வீடியோ பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்து மன்னராக Maha Vajiralongkorn என்பவர் கடந்தாண்டு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

தாய்லாந்து நாட்டு சட்டப்படி, மன்னரை அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், கடந்தாண்டு யூலை மாதம் ஜேர்மனியில் உள்ள முனிச் நகருக்கு சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் ஒரு பெண்ணுடன் மேலாடை இன்றி நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் உடல் முழுவதும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது வீடியோவாக சிலர் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து தாய்லாந்து அரசு அதிகாரிகள் பேஸ்புக் நிறுவனருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், ‘நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல் இந்த வீடியோக்கள் பேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

மன்னரை அவமதிக்கும் இந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply