திராட்சை தரும் நன்மைகள்

201708050836004426_grapes-fruits-health-benefits_SECVPF

திராட்சைப் பழத்தை அதன் தித்திப்புக்காக அன்றி, சத்துகளுக்காகவே சாப்பிடலாம். இந்த பழத்தில் உள்ள சத்துக்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திராட்சைப் பழத்தை அதன் தித்திப்புக்காக அன்றி, சத்துகளுக்காகவே சாப்பிடலாம்.

திராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சியும் சுறுசுறுப்புத் தன்மை கிடைக்கும்.

எனவே இப்பழங்களை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் உறக்கம் பாதிக்கப்படும்.

அதேபோல, அசிடிட்டி, அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் திராட்சைப் பழம் மற்றும் பிற பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

திராட்சை முதல் அனைத்து வகையான பழங்களையும் இரண்டு வேளை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதைத் தடுக்கும்.

தினமும் திராட்சைப் பழச்சாறு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

திராட்சைப் பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரிப்படுத்தி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது.

திராட்சைப் பழம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும், எடை குறைவாக இருப்பவர்களும், உடலில் அதிக சூடு இருப்பவர்களும் திராட்சைப் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்டால் என்ற அமிலம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, உடலில் தேவையில்லாமல் ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

பசி உணர்வு இல்லாமல் உள்ளவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட்டால் அது பசியைத் தூண்டிவிடும். அத்துடன் வயிறு மற்றும் குடலில் உள்ள கோளாறுகளை குணமாக்கும்.

சிறிதளவு திராட்சையை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படும், சுருக்கங்கள் சரியாகி சருமம் பொலிவு பெறும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply