திருணமத்திற்கு ஆயத்தமான இளம் யுவதி பலி!!

திருமணத்திற்கு ஆயத்தமான பெண்ணொருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் Guzel Zakirova என்ற 23 வயதான யுவதி என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

திருமண நிகழ்விவை முன்னிட்டு அவர் தனது நண்பியுடன் சிகையலங்காரம் செய்து கொண்டு மீண்டும் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அந்த யுவதி மோட்டார் வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் செலுத்திய மோட்டார் வாகனம் Bashkortostan பகுதயில் மேலும் ஒரு மோட்டார் வாகனத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வில் கலந்து கொள்ள ஆயத்தமாகவிருந்த உறவினர்கள் இறுதியில் அந்த யுவதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.

அவரை திருமணம் செய்யவிருந்த Guzel Zakirova என்ற 23 வயது இளைஞர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து, மயானத்திலேயே வெகு நேரம் இருந்துள்ளார்.

advertisement

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply