தூக்கத்தை திருடும் ஸ்மார்ட் கைப்பேசிகள்: இதோ வந்துவிட்டது புதிய தீர்வு

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது.

இதற்கு மேலாக தூக்கத்திற்கு செல்லும் நேரத்திலும் இவற்றின் பாவனையானது தூக்கத்தை கலைத்து பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் தீர்வு தரக்கூடிய ஒரு முடிவு கிடைத்துள்ளது.

அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி பாவிப்பவர்கள் அணியக்கூடிய விசேட கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக் கண்ணாடியானது கைப்பேசிகள், தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு குறித்த ஒளி உறுஞ்சப்படுவதனால் குறித்த நேரத்தின் பின்னர் தானாகவே தூக்கம் தூண்டப்படுகின்றது.

இதனால் விரைவாக நித்திரை செய்யக்கூடியதாக இருப்பதுடன், ஆரோக்கியமான தூக்கத்தினையும் தரக்கூடியதாக காணப்படுகின்றது.

அதாவது தூக்கமானது 58 சதவீதத்தினால் உந்தப்படுகின்றது.

இக் கண்ணாடியானது Houston பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply