தேசிய சீனியர்உதைபந்தாட்ட அணியில் அண்ணன்! தேசிய ஜீனியர் உதைபந்தாட்ட அணியில் தம்பி!

இலங்கை தேசிய உதைபந்தாட்ட யாழ் வீரரான S. ஞானரூபன் அவர்களின் சகோதரர் யா/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவனான S. யூட் சுமன் இலங்கை தேசிய (Under-19) உதைபந்தட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

11733379_10204260696497474_836433200_nசர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிக்கான அணியில், தேசிய அணியில் இடம் பெற்றதுடன் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ரீதியிலான பல போட்டிகளில் திறமையினை வெளிப்படுதியதைத் தொடர்ந்து அனியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.11736897_10204260696537475_236573152_nகுறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற (FFSL-Division-2) ) உதைபந்தாட சுற்றுப்போட்டியில் புனித ஹென்றியரசர் கல்லூரி இவர் தலைமையில் தேசிய ரீதியில் champion ஆனதுடன் அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன் பாடசாலை மட்ட போட்டியில் கோட்ட, வலய, மாவட்ட,மாகாண ரீதியில் champion ஆனதுடன் தேசிய ரீதியில் 2 ம் இடத்தினையும் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவை தவிர பல்வேறுபட்ட சுற்றுப் போட்டிகளில் தேசிய அளவில் champion ஆனதுடன் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுளார். இவர் ஒரு சிறந்த முன்கள வீரராக கானப்படுவதுடன் பின்கள வீரராகவும் செயற்படுகின்றார். அத்துடன் யாழ்மாவட்ட senior தெரிவு அணியிலும் இந்த ஆண்டு இடம் பிடித்திருந்தார். இவற்றிற்கு ஒரு படி மேலாக தேசிய உதைபந்தாட்ட அணியிலும் இடம் பிடித்து எமது பிரதேசத்திற்கும் யாழ்மாவட்டத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply