தேன் தரும் மருத்துவ பயன்கள்

Honey, then

பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் நாம், எமது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டி பல உணவுகளை சேர்க்காமல் விடுகின்றோம். கடைகளில் கிடைக்கும் சாப்பாட்டிற்கும் ஆங்கில மருந்துகளுக்குமே நமது உடலை பழக்கப்படுத்தி விட்டோம்.

நாம் ஊர்களில் எடுக்கும் சிறந்த தேனில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். அதனால் தான் அந்தக் காலத்தில் ஆயுள் வேத வைத்தியர்கள் எந்த மருந்தை கொடுக்கும் பொழுதும் தேனை பரிந்துரைத்தனர். இன்றைக்கும் ஆயுள் வேதத்தில் தேன் நிறைய நோய்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

அந்த வகையில், சுத்தமான தேனை பயன்படுத்துவதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ள கூடிய நன்மைகள் என்ன என்பது பற்றி எடுத்து நோக்கலாம்.

தேனையும், மாதுளம் பழ சாற்றையும், சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது இரத்த சோகை இருந்தால் தேனும் பாலும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ எலுமிச்சம் சாநோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரைக்கு அரைவாசி தேனும் இஞ்சிச்சாறும் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால் தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

இவ்வாறான மருத்துவ குணங்கள் நிறைந்த தேனை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் சிறந்த பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply