Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் / நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

sri

நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
  • நமது உடம்பில் செலினியம் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். எனவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • நண்டு சாப்பிடுவதால், அது நமது வளர்ச்சி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது நமது முடி, நகம், சருமம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • நண்டில் உள்ள ஜிங்க், நமது சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே நமது முகத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • நண்டில் நியாசின் அதிகமாக இருப்பதால், நமது உடம்பில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைன்களின் அளவை குறைக்கச் செய்கிறது.
  • நண்டில் இருக்கும் மக்னீசியம், நமது நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நண்டு நமது உடலின் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக்குகிறது.
  • கருத்தரிக்க நினைக்கும் பெண்கள், நண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் ஃபோலேட் என்ற சத்துக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருப்பதை விட நண்டில் அதிகமாக உள்ளது.
  • நண்டில் இருக்கும் ஒமேகா-3 மற்றும் ஃபேட்டி அசிட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இவை நமது ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top