நல்லூரில் இந்து ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம்!

அகில இலங்கை இந்து மாமன்றம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்னெடுக்கும் இந்து ஆராய்ச்சி மாநாடு இன்று 31.07.2015 பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது. மாமன்றத்தின் யாழ். பணிமனையில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி நல்லூர் கோவிலை அடைந்து பின் அங்கிருந்து ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தை அடைந்தது.

இன்றைய நிகழ்வுகள் மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் இடம்பெற்றன. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள தருமபுர ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீமத் மௌன குமாரசுவாமித் தம்பிரான், நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞர்னசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சின்மயமிஷன் யாழ். வதிவிட ஆச்சாரியார் ஜாக்கிரத் சைதன்யா, இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் வண.தா.மஹாதேவக் குருக்கள், சைவக்குருமார் அர்ச்சகர் சபையைச் சேர்ந்த வண. சதா.மகாலிங்கசிவக் குருக்கள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். சுவாமி விபுலானந்தர் வழியில் கிழக்கில் ஆன்மீக எழுச்சி என்ற பொருளில் பேராசிரியர் அ.சண்முகதாசும் நாவலர் வழியில் வடக்கில் ஆன்மீக எழுச்சி என்ற பொருளில் கலாநிதி ஆறு.திருமுருகனும் சிறப்புரைகளை ஆற்றினர்.

01.08.2015 சனி, 02.08.2015 ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை ; மூன்று மூன்று அரங்குகளாக சமகாலத்தில் இடம்பெறும் பத்து அரங்குகளில் ஈழத்து இந்து மதத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கு என்ற தொனிப்பொருளில் 70 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
11221719_10154048842885744_860723467722259946_n 11822394_10154048842900744_8320815909333089782_n 11822400_10154048842890744_2676069709117132721_n 11825581_10154048842895744_5644221822185023846_n
ஆய்வரங்குகளில் இடம்பெறவுள்ள கட்டுரைகளை மேற்பார்வை செய்து ஆய்வரங்கை வடிவமைத்தமைக்காக பேராசிரியர் அ.சண்முகதாஸ் மாமன்றத்தலைவராலும் பிரதம விருந்தினர் ச.வி.விக்னேஸ்வரனாலும் செயலர் மு.கதிர்காமநாதனாலும் முன்னாள் தலைவர் வி.கயிலாசபிள்ளையாலும் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வுகள் 7.45 மணியளவில் நிறைவுற்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply