நாடாளுமன்றத்தில் மகனுடன் துள்ளி விளையாடிய கனடிய பிரதமர்

canadason004கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து மூன்றாவது நாளாக தனது 3 வயது மகனுடன் அலுவலகத்திற்கு சென்று விளையாடியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கனடா நாட்டின் இளம் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மூவரில் மிகவும் இளையவரான 3 வயது Hadrien எனப்பெயரிடப்பட்ட மகனை கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு பிரதமர் அழைத்து சென்று விளையாடி வருகிறார்.

நேற்று மகனுடன் அலுவலகத்திற்கு வந்த பிரதமர் தன்னுடைய அறையில் மகனுடன் திருடன்-பொலிஸ் விளையாட்டை விளையாடியுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது மகனை அருகில் வைத்துக்கொண்டு பேட்டியளித்துள்ளார். அப்போது, செய்தியாளர்களை பார்த்து பிரதமரின் மகன் கையசைத்து பேசியதை அனைவரும் சிரித்து ரசித்துள்ளனர்.canadason003

செய்தியாளர்களின் பேட்டிக்கு பின்னர் தனது தந்தையும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்து தந்தையின் கைப்பேசியில் விளையாடியுள்ளார்.

மகனுடனான தனது அலுவலக அனுபவத்தை பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்தியுள்ளார்.canadason001

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply