நீங்கள் தயிரை வெறுப்பவரா? இதைப் படியுங்கள்

44883_306411679459011_1214811397_n

சாதாரணமாக தயிர் உட்கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியம். மற்றும் உடலில் உள்ள சூட்டை நீக்கி குளிர்மை தரும் என்றெல்லாம் அறிந்திருப்போம். ஆனால் தயிர் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகின்றது.

தினமும் காலையில் தலைமுடி சீவும் பொழுது முடி உதிர்கின்றது என கவலைப்படும் பெண்கள் அதிகம். எனவே குறித்த பிரச்சினையை எண்ணி தினமும் கவலைப்படுபவர்கள் தலை குழிக்கும் பொழுது தயிரை நன்கு தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் 5நிமிடம் கழித்து தலையை குழித்து வந்தால் தலையில் பொடுகு தொல்லை நீங்குவதுடன் தலைமுடி உதிர்வதும் நின்றுவிடும். அத்துடன் முடி மென்மையாகவும் காணப்படும்.

அத்துடன் வறண்ட சருமம் உடையவர்கள் வெயிலில் சென்று வந்தவுடன் அல்லது இரவில் தினமும் தயிரை தேய்த்து மசாஜ் செய்து முகம் கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி தன்மை நீங்குவதுடன் முகப்பரு பிரச்சினையும் தீரும்.

மேலும் உணவில் தினமும் தயிரை சேர்த்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையினால் ஏற்படும் தொற்று நோய்கள் ஏற்படாத. மேலம் பெண்களுக்கு ஏற்படும் சில பெண் உறுப்புக்கள் தொடர்பான நோய்களும் மாறிவிடும் மற்றும் தொடர்ந்து தயிரை சாப்பிடுவதால் குறித்த நோய்கள் எற்படவும் வாய்ப்புக்கள் இல்லை. எனவே எமக்கு இலகுவாக கிடைக்க கூடிய தயிர் பல்வேறு பிரச்சினைகளின் மருந்தாக இருக்கும் பொழுது அதை சரிவர பயன்படுத்தி பயன்பெறுவோம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply