நீச்சல் அதிசயம்!. ஒலிம்பிக் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்த கனடிய பெண்

rio4கனடாவை சேர்ந்த Penny Oleksiak றியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற 100மீற்றர் தடையற்ற நீச்சல் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளார்.
ரொறொன்ரோவை சேர்ந்த இவர் யு.எஸ்.சை சேர்ந்த சிமோன் மனுவல் என்பவருடன் 52.70 நேரத்தில் வந்து சமநிலையில் தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக்கில் முதலாவது கனடிய நீச்சலாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். தங்க பதக்கத்தை வென்றதுடன் நான்கு பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் அவர்களது சமநிலை நேரத்திலும் ஒலிம்பிக்கில் சரித்திரம் படைத்துள்ளனர்.
கனடிய ஒலிம்பிக் குழு Oleksiak கை அவரது சரித்திர பதக்கத்திற்காக பாராட்டியது.
கனடியர் ஒருவர் கோடை கால ஒலிம்பிக்கில் நான்கு மெடல்களை பெறுவது இதுவே முதல் தடவை எனவும் குழு தெரிவித்துள்ளது. ஈடிணையற்றது! கனடா பெருமையடைகின்றது எனவும் கூறப்பட்டது.
இது மட்டுமன்றி பெண்களிற்கான 100-மீற்றர் தடையற்ற இறுதி நிலைக்கு தகுதி பெற்ற கனடியர் ஒருவர் மற்றும் உலக இளநிலையாளர் என்ற சாதனையையும் நிலை நாட்டியுள்ளார்.

rio3rio2rio1rio

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply