நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வைத்தியசாலையைப் பயன்படுத்தி மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக செயற்படும் எனவும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு வருங்காலங்களில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணிகளால் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், அச் சூழல் அசுத்தமடைவதாக அவர் கூறியுள்ளார்.

ரயில்வே திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடு பூராகவுமுள்ள பிரதான ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்கள் 351இல், இன்று முதல் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply