நேரடி ஒளிபரப்பு வசதியுடன் அறிமுகமாகும் 360 டிகிரி கமெரா!

சமூக வலைளத்தளங்கள் ஊடாக நேரடி ஒளிரப்பு செய்யக்கூடிய வசதியுடன் VRDL360 எனும் சிறிய ரக கமெரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கமெராவின் ஊடாக 7K அதி உயர் துல்லியம் கொண்ட புகைப்படங்களைம், 3K துல்லியம் வாய்ந்த வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

இதனை லாஸ் ஏஞ்சலிலுள்ள VR Dongli எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மேலும் இதன் ஊடாக 360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

25,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் தற்போது இக் கமெராவானது Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தொகை எட்டப்பட்டதும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply