படகுகளை மீட்க இலங்கை வந்துள்ள குழு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட விசைப் படகுகளை மீட்டு வர நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை புறப்பட்டுள்ளனர்.

பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை சிறைபிடிக்கப்பட்டுள்ளது என, இந்திய ஊடகமான விகடன் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, இந்திய மத்திய, மாநில அரசுகள் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடர்ந்து 42 படகுகளை மட்டும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் படகுகளில் 10 படகுகள் மீட்க முடியாத நிலையில் சேதமாகிப் போனது.

எஞ்சிய படகுகளை மீட்க மீனவர்கள் குழு குழுவாக இலங்கை சென்று வருகின்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply