பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வரலாற்றுப்புகழ் பாடும் “அற்புதகீதங்கள்”

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மனின் வரலாற்றுப்புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” என்ற இறுவட்டு 02/08/2015 (ஞாயிற்றுக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளதனை மிக்க மகிழ்வோடு அறியத்தருவது மட்டும் அன்றி அனைத்து அன்னையின் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.

பாடலுக்கான இசையினை ஈழத்து இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் மிகவும் அற்புதமாக வழங்கியிருக்கின்றார். ஜெயநாதன் மற்றும் எனது கவிவரிகளுக்கு இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் S.G.சாந்தன், K.ஜெயரூபன், S.கோகுலன், S.சுலக்சன், பிரதா.K, S.G.கோபு,நெடுங்கேணி ராஜேந்திரா அவர்கள்.

11800566_1617345558536119_1203325992161231903_n

மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நயினை அன்னைமகன்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply