பரபரப்பான முக்கிய ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரீஸ் வெற்றி!

உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பிரிவு 2 க்கு தெரிவுக்கான முக்கிய போட்டியில் பாடுமீன் சென்மேரீஸ் அணிகள் புத்தூர் எவரஸ்ட் மைதானத்தில் இன்று (31.07.2015) மோதிய போட்டியில் ஆட்டம் ஆரம்பம் ஆகியதில் இருந்து இரு அணி வீரர்களும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினானர். முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவுமின்றி சமநிலையான நிலையில் காணப்பட்டன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் சென்மேரீஸ் அணியினாரால் 1 வது கோல் போடப்பட்டு ஆட்டம் பரபரப்பான கட்டத்தினை நோக்கி தொடர்ந்தன.

போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கையில் பாடுமின் அணி தனது முதலாவது கோலை அடித்து போட்டியினை சமநிலை படுத்தினர். ஆட்டம் சமநிலையானதால் மேலதிக நிமிடம் கொடுக்கப்பட்டது அதிலும் சமநிலையானதால் போட்டி தண்ட உதை முடிவிற்கு நடுவர்களால் இட்டுச்செல்லப்பட்டது. தண்ட உதையில் பாடுமீன் வீரர் முதலாவது வாய்ப்பினை கோல்பரப்பக்கு மேலாக அடிக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாய்ப்புக்களையும சென்மேரீஸ் கோல் காப்பாளரால் மிக ஙட்பமாக தடுக்கபட்டதாலும் சென்மேரீஸ் வீரர்கள் ழூவர் தொடர்ச்சியாக தண்ட உதையினை கோலாக்கியமையால் தண்ட உதையில் முடிவில் 3 -.0 என்ற நிலையில பாடுமீன் அணியினை எதிர்த்து ஆடிய சென்மேரீன் அணி 4 – 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று யாழ்மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 2க்கான தெரிவு போட்டி தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

11791878_10204358001730044_1842725481_n 11825699_10204357959368985_5209388986495291776_n

போட்டியின் சிறப்பு அம்சமாக தண்ட உதை முடிவுக்கு போட்டி செல்ல முன்பு இறுதி 2 நிமிட ஆட்டத்தில் மாற்று கோல் காப்பாளராக களமிறங்கிய சென்மேரிஸ் கோல்காப்பாளர் சுதா தண்ட உதையில் கோல் பரப்புக்குள் சென்ற 2 வது மற்றும் 3 வது பந்தை மிக ஙட்பமாக தண்டியமை பார்வையாளரை ரசிக்கவைத்தது மட்டமின்றி சென்மேரீஸ் வெற்றிக்கு தனது 5 நிமிட ஆட்டத்தினை பெறுமதியாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply