Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / பாடசாலை சீருடையில் மாற்றம் ஏற்படாது

பாடசாலை சீருடையில் மாற்றம் ஏற்படாது

பாடசாலை மாணவர்களில் ஆடையில் மாற்றம் கொண்டுவருவதில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாற்றம் கொண்டுவர வேண்டாம் என அறிவித்ததையடுத்து அந்த திட்டத்தை கைவிட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார்

சித்திர போடியின் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

தோட்டப்புர பாடசாலைகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றது இந் நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிலவி வருகின்றன.

இவ்வாறான நிலையிலே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில் கட்டாயமாக இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுவர்

மலேசியா நாடு உட்பட ஐரோப்பிய நாடுகளில் பாலர் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

பாலர் பாடசாலை பற்றிய நடைபெற்ற உலக மகா நாட்டில் இலங்கை சார்பாக நானும் கலந்துகொண்டேன்.

சிறுவர்கள் 6 வயது வரை பாலர் பாடசாலை கட்டாயமாக வேண்டும் என்று நானும் கையெளுத்திட்டேன்.

இதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன்.

தற்போது உள்ளூராட்சி சிறுவனங்களும் ஏனைய நிறுவனங்களும் நடத்தி வருகின்றமையினால் எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் சிந்திப்போம் என்றார்கள்.

அவ்வாறு ஆகும் பட்சத்தில் தொழில்வாய்ப்புகள் கிடைப்பதுடன் சிறுவர்கள் மண வளர்ச்சியும் மேலும் மேம்படும் என்றார் ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top