பாடசாலை மைதானத்தில் சந்தேகத்திற்கிடமாக கண்டுபிடிக்கப்பட்ட பொதியை பொலிசார் வெடிக்க செய்தனர்

bombரொறொன்ரோ–எற்றோபிக்கோ பகுதியில் பாடசாலை மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று கிடக்க கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வெடிக்க செய்வதற்கு மூன்ற ரயர்கள் தேவைப்பட்டதாகவும் ஆனால் ரொறொன்ரோ பொலிசார் குறிப்பிட்ட இந்த பொதியை வெடிக்க செய்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை இரவு இப்பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சென்ட்.யூஜின் கத்தோலிக்க பாடசாலை மைதானத்தில் 14-வயது மதிக்கத்தக்க மூன்று வாலிபர்கள் பாடசாலைக்கு பின்னால் கறுப்பு நிற பொருள் ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதாக முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் இதனை கண்டுபிடித்தனர் என கூறப்பட்டுள்ளது.
bomb1இப்பொதி ஒரு காற்பந்து அளவானதெனவும் கறுப்பு நிற எலக்ரிக்கல் ரேப்பினால் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
“ACME cartoon” கறுப்பு வெடிகுண்டு போன்ற தோற்றம் கொண்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குண்டை வெடிக்கச்செய்வதற்கு முன்னராக பொலிசார் அப்பகுதி குடியிருப்பாளர்களின் கதவுகளை தட்டி அவர்களை வீட்டின் கீழ்பகுதிகளிற்கு செல்லுமாறு எச்சரித்துள்ளனர். பின்னர் பொதியை பாதுகாப்பான இடமொன்றிற்கு கொண்டு சென்று வெடிக்க செய்துள்ளனர்.
முதல் இரண்டு தடவைகள அதிகாரிகள் பொதியை வெடிக்க முயன்றும் முடியவில்லை. மூன்றாவது தடவையாகத் தான் வெடிக்க செய்தனர்.
பொதிக்குள் என்ன இருந்ததென அவர்களிற்கு தெரியவில்லை என தெரிவித்த பொலிசார் எதுவாயினும் அது மிக ஆபத்தானதென தெரிவித்துள்ளனர். பரிசோதிதக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று வாலிபர்களையும் பொலிசார் தேடுகின்றனர்.இச்சம்பவம் குறும்பு தனத்திலிருந்து ஒரு வகை ஆபத்தான செய்கையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

bomb2

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply