பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதிக் கட்டத்தில்

பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை தயாரிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 விசாரணை அறிக்கைகளை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை கடந்த செப்டம்பர் மாதம் 03ம் திகதி நிறைவடைந்த போதிலும், அறிக்கைகளை தயாரிப்பதற்காக மேலுத் இரண்டு மாத கால அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்தக் கால எல்லை எதிர்வரும் மாதம் முதலாவது வாரத்துடன் நிறைவடைகிறது.

இந்தக் காலப் பகுதிக்குள் அனைத்து விசாரணை அறிக்கைகளையும் இறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

தற்போது வரை இந்த ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட சம்பவங்களின் 17 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற 17 அறிக்கைகளுடன் சேர்த்து ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply