பிக்பாஸ் வீட்டில் கலக்கும் ஓவியா வாழ்வில் மறைந்திருக்கும் சோகம்- சிறு வயதிலேயே இப்படியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம விறுவிறுப்பாக செல்கின்றது. இந்நிலையில் இதில் மக்களின் பேவரட்டாக இருப்பது ஓவியா தான்.

ஆனால், ஓவியா என்ன தான் பிக்பாஸில் கலக்கினாலும், தன் நிஜ வாழ்க்கையில் மிகவும் சோதனைகளை கடந்து வந்தவர்.

ஓவியாவின் தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமே இல்லையாம்.

அந்த ஒரு காரணத்தினால் தான் தனக்கு இந்த படத்தில் பெயர் கிடைக்காது என்று தெரிந்தும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாராம்.

தன் அம்மாவை தன்னுடன் வைத்தே பல நாட்கள் பார்த்துள்ளார், முடிந்த அளவு அவரை காப்பாற்ற அவர் போராட, இறுதியில் சிகிச்சை பலனின்றி அவருடைய தாயார் இறந்துள்ளார்.

இதன் பிறகு ஓவியா தான் தன் குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் பார்த்து வருகின்றாராம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply