பிணை முறி மோசடியில் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்பு!

download

மத்திய வங்கியின் முறிகள் விநியோக மோசடியில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளதென்றும், முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்றும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரோமி விக்ரமசிங்கவிடமும் விசாரணை நடத்த வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

ஐ.தே.க.வின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பத்திக பத்திரணவால், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாரோ ஒரு பெண் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டதென இதன்போது குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏனையோர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமென வலியுறுத்தினார்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply