பித்தவெடிப்பில் இருந்து பாதங்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்

piththam_01

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட வயதிலேயே (21தொடக்கம்)பாதங்களில் பித்த வெடிப்பு பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடுவர். இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பார்கள். பித்தவெடிப்பு அதிகரித்தால் கால்வலி ஏற்படும். அவ்வாறு இல்லாவிடினும் வறண்ட தடித்த தோல் உடைய கால்கள் காணப்படும் . இதன் காரணமாக அழகு மட்டுமின்றி அரொக்கியமும் குன்றிவிடும். எனவே பித்தவெடிப்பில் இருந்து பாதங்களை எவ்வாறு பாதுகாப்பத என்று நோக்கலாம்.

1.தினமும் படுக்கைக்கு செல்லும் பொழுது பாதங்களை உப்பு நீரில் ஊறவிட்டு நன்கு உரசி களுவுதல் வேண்டும். இதனை தினமும் இரவில் செய்ய வெண்டும்.

2. பித்த வெடிப்பு உடையவர்கள் மஞ்சல் வேப்பம் குருத்தி சேர்த்து அரைத்து குறித்த விழுதை பாதங்களுக்கு தடவி ஊறவிட வேண்டும். பின்னர் சுடு நீரினால் கழுவி விட்டு தேசிப்பழம் கொண்டு பாதங்களை உரச வெண்டும். அதன் பின்னர் உப்பு நீரினால் கழுவி பின்னர் பித்தவெடிப்பிற்கான கிறீம்களை புசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வர பித்தவெடிப்பு மாறும்.

3.வீட்டில் நிற்கும் பொழுதம் செருப்பு அணிதல் அவசியம். ரப்பர் செருப்புகளை தவிர்த்து மெல்லிய தோல் செருப்புகளை அணிதல் வேண்டும்.

4. வீட்டில் நிற்கும் பொதெல்லாம் தினமும் கால்களை அடிக்கடி கழுவுதல் வேண்டும். வெளியில் சென்று வந்தால் உடனும் கால் கழுவும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

5.எமது உணவும் பழக்கம் நித்திரை போன்ற அன்றாட பழக்கங்களை சீராக கடைப்பிடிக்க வேண்டும். உடலில் பித்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பித்தம் இருக்கும் பட்சத்தில் பித்த உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply