பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா.

இவர் தற்போது ஹிந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். உன் சமையல் அறையில் என்ற படத்தின் ரீமேக் தான் இது. பிரகாஷ் ராஜ் வேடத்தில் நானா படேகர் நடிக்க சினேகாவுக்கு பதிலாக ஸ்ரேயா நடிக்கிறார்.

இப்படம் குறித்து ஸ்ரேயா பேசும்போது, நானும், பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குனரை பற்றி குறை கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம். தற்போது பிரகாஷ் ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் புகார் கூற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply