பிரித்தானிய அமைச்சர் ஆலோக் ஷர்மாவின் இலங்கைப் பயணம் ரத்து

Alok Shama

பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய வெளிவிவகார அமைச்சர் ஆலோக் ஷர்மாவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இன்று (புதன்கிழமை) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தேர்தலை நடத்துவதாக அவசரமாக அறிவித்தார். இதனையடுத்தே குறித்த பயணத்தை ரத்து செய்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோக் ஷர்மாவின் விஜயத்தின் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பாக்கப்பட்டிருந்தது.

குறித்த விஜயத்தின் போது அவர், 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தங்கி இருப்பார் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply