புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொள்ள இதைச் செய்தால் போதுமா?

21-1437473187-1smoking

இன்றய இளைஞர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினையே புகைப்பிடிப்பதை நண்பர்களுடன் சேர்ந்து பழகிவிட்டு பின்னர் அதை கைவிட முடியாமல் தவிர்ப்பது ஆகும். ஆனால் குறித்த பிரச்சினைக்கு வாழைப்பழம் சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு என்கின்றனர் வைத்தியர்கள்.

குறித்த விடயத்தில் இளைஞர்களை குறை கூறவிட முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழலின் பொருட்டு புகைக்க பழகியவர்கள் பின்னர் அதில் இருந்து விடுபட முடியாதவர்களாக நிக்கோட்டினுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆனால் சிலர் அதில் இருந்து விடுபட முயற்சிப்பார்கள்.

எனவே நீங்களும் நிக்கோட்டினுக்கு அடிமையானவரா? உடலுக்கும் ஆரோக்கிமான வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் குறித்த பழக்கத்தில் இருந்து விடுபட முயல்பவரா? உடனடியாகவே இதைக் கடைப்பிடியுங்கள்.

தினமும் சிகரெட்டை வாங்கி பையில் வைப்பதற்கு பதிலாக வாழைப்பழத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் புகைக்கும் நேரம் வரும் பொழுதெல்லாம் புகைக்க தோன்றும். அந்த நேரத்தில் மனதை கட்டுப்படுத்தி ஓரு சிகரெட் புகைப்பவராயின் 1 வாழைப்பழமும் இரண்டு சிகரெட் புகைப்பவராயின் 2 வாழைப்பழமும் உட்கொள்ளுங்கள்.

இவ்வாறு 1மாதம் கஸ்ரப்பட்டு செயற்படுத்தினால் போதும் பின்னர் தானாக சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உணர்வு உடல் ரீதியாக இல்லாமல் போய்விடும். ஆனால் மனதை சீராக பேணுவது உங்கள் கைகளில் என்கின்றனர் வைத்தியர்கள்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply