Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / புதிய அரசியலமைப்புக் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை: அஜித்

புதிய அரசியலமைப்புக் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை: அஜித்

ajith-p-pereraa-719x4801

புதிய அரசியலமைப்புக் குறித்து பௌத்தர்கள் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்காதுவிட்டால், புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரத் தேவையில்லை. அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் காணப்படும் பௌத்த மதத்துக்குரிய அதே இடம், புதிய அரசியலமைப்பிலும் இருக்கும்.

இதேவேளை, பிரிவினைவாத அரசியலமைப் பொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top