புதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்!

புதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்!கனடாவின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் விண்வெளி வீரர் ஜூலி பெயட்டினுக்கு சக்திவாய்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின் அரசாங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத், இல்லாத நேரத்தில் கனடா நாட்டு அரசாங்க தலைவராக செயற்பட ஜூலி பெயட்டினுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் முடிவுகள் மேற்கொள்ளவும், அவசியம் என்றால் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது.

கனடா நாட்டு ஆயுதப்படைக்கு தளபதியாக இருப்பது மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பிரதமருக்கு இவர் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போதைய ஆளுநராக பதவி வகித்து வரும் டேவிட் ஜோன்சனின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவு பெறுவதையடுத்து ஜூலி பெயட்டின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply